உளுந்துார்பேட்டையில் தாசில்தார் சிறைபிடிப்பு

உளுந்துார்பேட்டையில் தாசில்தார் சிறைபிடிப்பு

Update: 2024-12-24 17:18 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த ஆண்டிக்குழி ஊராட்சி விஜயங்குப்பம் கிராமத்தில் 30 ஆண்டாக வீடு கட்டி வசித்து வரும் தலித் மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தர வலியுறுத்தி, இன்று ஆண்டிகுழி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடப்பதாக மார்க்சிய லெனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மாலை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிலர் மட்டுமே பங்கேற்க தாசில்தார் அனந்தகிருஷ்ணன் கூறிதால், வாக்குவாதம் ஏற்பட்டது. தாசில்தார், கூட்டத்தை நடத்தாமல், காரில் ஏறி புறப்பட தயாரானார்.ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள், தாசில்தார் காரை சிறைபிடித்தனர். அவர்களை தாசில்தார் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு, முற்றுகையை கைவிட்டனர். பின்னர் நடந்த கூட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார்.

Similar News