முன்விரோதத்தால் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்கள் 4 பேர் கைது
முன்விரோதத்தால் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்கள் 4 பேர் கைது
மீஞ்சூர் அருகே, வல்லூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, வல்லூர் எம்.சி நகரை சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது மகன் ஜோசப்(35). இவர், மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு ஜோசப் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜோசப்பை தலை மற்றும் கை, கால்களில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து, மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மீஞ்சூர் அடுத்த நாலூர் ஜெயராமபுரத்தைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் தினேஷ்(28), நாலூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள் என்பவரின் மகன் அஜித்(21), மேலும், இவரது நண்பர்கள் காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவரின் மகன் மணிகண்டன்(35), வில்லிவாக்கத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் ஜோஸ்வா(19) ஆகிய 4 பேர்களை மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் கைது செய்தனர்.