புதுகை பெரியார் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. நெடு நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். நேற்று மாலை 7 மணிக்கு ஆசிட் (அமிலம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய நகர காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் புதுகை நகர காவல் இன்ஸ்பெக்டர் மருது விசாரணை செய்தனர்.