புதுக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரக்கடை வீதி செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இதில் இரவு நேரங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் செல்லும் சிலர் கீழே விழும் சூழல் ஏற்படுகிறது. இதனால், பழுதடைந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.