புதிய சாலை அமைக்க எம்எல்ஏ ஆய்வு.
மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏ புதிய சாலை அமைக்க ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தையாறு அணை முதல் வைகாசி பட்டி மற்றும் முடுவார் பட்டி முதல் சல்வார்பட்டி வரை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை நேற்று (டிச.23)பார்வையிட்டு விரைவில் சாலை அமைத்திட ஆய்வு செய்தனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.