உளுந்துார்பேட்டை அடுத்த பு.மலையனுார் நொனையவாடி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 37.25 லட்சம் ரூபாய். மதிப்பீட்டில் நடக்கும் சாலை பணியினை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். பின்னர் ஏ. சாத்தனுாரில் 9.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டடத்தை ஆய்வு செய்த பின், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் தாவர நாற்றங்கால் பண்ணையை ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து உளுந்துார்பேட்டை நகராட்சியில் 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு செயல்பட்டுள்ள ் கலைஞர் அறிவு சார் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் பயன்படுத்தும் 15க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடந்தது. அவற்றை ஆய்வு செய்தபோது, நெட் இணைப்பு வழங்கப்படாமல் வெறும் காட்சிப் பொருளாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இது குறித்து கலெக்டர் அங்கிருந்த அலுவலர்களிட் கேட்டபோது ,நெட் சவதி இன்னும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் தங்களில் மொபைல் உள்ள நெட் வசதியை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர். சேர்மன் திருநாவுக்கரசு, நகராட்சி கமிஷனர் இளவரசன், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.