கன்னியாகுமரியில் மின்னொளியில் ஜொலிக்கும் காமராஜர் மண்டபம்
திருவள்ளுவர் விழா
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 30ஆம் தேதி திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையிடையே 77 மீட்டர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதி, காந்தி மண்டபம் காமராஜர் மணிமண்டபம், முக்கோண பூங்கா, சுனாமி பூங்கா, லேசர் காட்சி குளம் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. படகு தள த்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. கடற்கரை சாலை புதுக்கப்பட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காந்தி மண்டபத்தை தொடர்ந்து காமராஜர் மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது.