அரியலூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2024-12-25 17:24 GMT
அரியலூர், டிச.25- அரியலூர் மாவட்டம், மணக்கால் அருகே மகனுடன் ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி, நீரில் மூழ்கி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், கொத்தவாசல், குறவர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் நீலமேகம்(38). புதன்கிழமை இவர், தனது மகன் நித்தீஷை 10) அழைத்துக் கொண்டு, அரியலூர் அடுத்த மணக்கால் அருகேயுள்ள சுப்புராயபுரம் புது ஏரிக்குச் சென்றனர். அங்கு இருவரும் குளித்த நிலையில், நித்தீஷ் கரையேறிவிட்டார். ஆனால் நீலமேகம் கரையேறாததால் நித்திஷ் கூச்சலிட்டதையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக  அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வெகுநேரமாகியும் மீட்புப் பணித்துறையினர் வராததால் பொதுமக்களே ஏரியில் குதித்து தேடிய நிலையில், நீலமேகம் சடலமாக மீட்கப்பட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து அரியலூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், நீலமேகத்துக்கு அடிக்கடி வலிப்பு வருவதாக தெரியவருகிறது. எனினும் போலீஸôர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன

Similar News