ரேஷன் அரிசி கடத்தல்
ஆம்னிகாரில் 850 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்த நபர் கைது
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ராட்டைசுற்றிபாலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 850கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்பதும் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்க்காக கடத்தி சென்றதாக தெரிவித்தார்.தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்திய சேகரை கைது செய்த போலீசார் 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்