கீழப்பழுவூர் நெல் வயல்களில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி

கீழப்பழுவூர் நெல் வயல்களில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-12-25 17:27 GMT
அரியலூர், டிச.25- அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்திலுள்ள வயல்களில்,ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு சார்பில் சூழல் ஆய்வு மற்றும் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை களப் பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக மேலாண்மை அலுவலர் தமிழ்குமார் கலந்து கொண்டு, மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், தரமான அரசு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துதல், உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளான  சூடோமோனஸ் ஃப்ளோரசன்ஸ், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் போன்றவற்றை பயன்படுத்தும் முறைகள், அதன் பயன்கள், பயிர்களை . தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை அடையாளம் காணுதல், நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல் பற்றி விளக்கம் அளித்தார். திருமானூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் கொளஞ்சி, உதவி அலுவலர் சரத்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா, ஜிங் பாக்டீரியா போன்றவற்றை பயன்படுத்தும் முறைகள், வயல்வெளிகளில் விளக்கு பொறி வைத்தல் மற்றும் இயற்கை சூழலை பாதுகாக்கும் முறைகளுடன் சாகுபடி செய்தல் அவசியம் என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

Similar News