முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா தர்மபுரி பூபதி திருமண மண்டபம் அருகில் நடைபெற்றது.

Update: 2024-12-26 01:48 GMT
தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கட்ராஜ் அவர்கள் தலைமை வகித்தார் மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி நகர செயலாளர் சக்தி ஓபிசி அணியின் மாநில செயலாளர் சரவணன் மகளிர் அணி மாநில செயலாளர் சங்கீதா முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேசன் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் முன்னாள் நகரத் தலைவர் சக்திவேல் ஆகியோர் உட்பட பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டு வாஜ்பாய் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சியை ஓபிசி அணியின் மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் அவர்கள் செய்திருந்தார்கள்.

Similar News