காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் காரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் உரப்பனுார் கண்மாய் அருகே திருமங்கலம் நகர் போலீசார் வாகன சோதனையில் நேற்று (டிச.25) ஈடுபட்ட போது அவ் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, 1.100 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கார், அலைபேசி, கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டு, மேல உரப்பனுார் மூவேந்திரன்( 25), கரடிக்கல் ராமகிருஷ்ணன் (25), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.