சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை மாவட்டத்தில் பார்லியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேட்டை அடுத்த கோடாங்கிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (44,) என்ற கூலித் தொழிலாளி என்பவர் கடந்த மாதம் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் ஜாக்குலின் தலைமையில் போலீசார் வெள்ளைச்சாமியை கைது செய்தனர். எஸ்.பி.,அர்விந்த் பரிந்துரையில் இவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் சங்கீதா உத்தரவு பிறப்பித்தார்.