கன்னியாகுமாரி சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை செல்வதற்கு கடல் நடுவே கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 31 ஆம் தேதி திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாட உள்ள நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கன்னியாகுமரி வருகை தருகின்றார். இந்த நிலையில் திருவள்ளுவர் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு கலாச்சார பிரச்சார ஊர்வலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு கன்னியாகுமரியில் இன்று (26- ம் தேதி) துவக்கி வைத்தார். தமிழர்களின் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக கலாச்சார நடனம் மற்றும் தாரை தப்பட்டை உடன் மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சார பேரணி செல்ல உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.