மோகனூர் சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியை பள்ளியை மூடுவதற்கு கடும் எதிர்ப்பு ! மாணவர்கள், பெற்றோர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா தெரிவித்தார்.

Update: 2024-12-26 15:19 GMT
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1978-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது 150 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில, இப்பள்ளியில் மூட வேண்டும் என்று, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசின் சர்க்கரை துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.எனவே, நல்ல தேர்ச்சி விகிதமும், அதிக மாணவ மாணவிகள், விவசாயிகளின் பிள்ளைகள் படித்து வரும் இந்த மெட்ரிகுலேஷன் பள்ளியை மூடக்கூடாது என வலியுறுத்தி மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தின் முன்பு, தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழகத்தினர், அப்பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் (26.12.2024) கவன ஈர்ப்பு ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பள்ளியை மூட வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பள்ளியை தொடர்ந்து நடத்திட வேண்டும் அல்லது, அரசே பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் அல்லது நவோதயா பள்ளியாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்ல ராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், விவசாயிகள் சங்க தலைவர் வாசு சீனிவாசன் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் க.இராமல்லிகாவிடம் கோரிக்கை மனுவை ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேலாண்மை இயக்குநர் மல்லிகா தெரிவித்தார். இதுகுறித்து விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் செல்ல.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்..... இப்பள்ளி தொடர்ந்து அதிக மாணவ மாணவிகள் சேர்க்கை மற்றும் நல்ல தேர்ச்சி விகிதம் தருகின்ற பாரம்பரியமிக்க பள்ளியாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த பள்ளியை மூடும் முடிவை கைவிட வேண்டும். அல்லது அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது., நவோதயா பள்ளியாக இதனை தரம் உயர்த்த வேண்டும் என்றும், இப்பள்ளியில் எழை எளிய விவசாய குடும்பத்தின் பிள்ளைகள் படித்து வருவதால் அவர்களுக்கு, எதிர்காலம் கருதி பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூறும்போது இப்பகுதியில் நல்ல தேர்ச்சி தரும் இந்த பள்ளியை தொடர்ந்து நடத்தினால் தான் தங்கள் குழந்தைகளில் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் இதில் சிறப்பு கவனம் எடுத்து தொடர்ந்து பள்ளியில் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், விவசாய முன்னேற்ற கழகம், பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள், பாஜக, நாம் தமிழர், தமிழ் புலிகள், அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News

தற்கொலை