கஞ்சா செடி வளர்ப்பு
தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இதேபோல் அடர்ந்த வனப் பகுதியையும் இங்கு உள்ளது. இந்நிலையில் தாளவாடி அடுத்த சூசைபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று தாளவாடி போலீசார் தோட்டத்தை ஆய்வு செய்த போது விவசாய தோட்டத்தில் மற்ற செடிகளுடன் சேர்ந்து 4 கஞ்சா செடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தாளவாடி பகுதியில் கஞ்ச செடி வளர்த்தல் தொடர்பாக வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தாளவாடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.