கோவை: சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை !

கோவையில் உள்ள இல்லத்தின் முன்பு தனக்குத்தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Update: 2024-12-27 04:55 GMT
சென்னையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்று கோவையில் சவுக்கால் அடித்துக் கொள்ளப் போவதாக நேற்று நிருபர்களிடம் கொடுத்த பேட்டியில் கூறியிருந்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சொன்னதைப் போலவே திமுக அரசை கண்டித்து தன்னைத்தானே கோவையில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு, ஆறுமுறை சாட்டையால் அடித்துக் கொண்டார். அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்களும் #shameonyouStalin என்ற பதாகைகளோடு, திமுக அரசை கண்டித்து தோஷங்கள் எழுப்பினர்.

Similar News