ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம்

மதுராந்தகம் அருகே திருப்பூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஆறு பெண்கள் காயம் அடைந்தனர்

Update: 2024-12-27 04:53 GMT
மதுராந்தகம் அருகே திருப்பூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஆறு பெண்கள் காயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில்அய்யனார் கோவில் என்ற இடத்தில் சாலையில் கவிழ்ததால் அதில் நோயாளியுடன் வந்த ஐந்து பெண்கள் உள்பட ஆறு பெண்கள் காயம் அடைந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி To சென்னை மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல்சுமார் ஒரு மணி நேரம் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

Similar News