கார் டயர் வெடித்து கம்பத்தில் மோதி விபத்து

ஒட்டன்சத்திரம் அருகே ஸ்கார்பியோ கார் முன்பக்க டயர் வெடித்து மின் கம்பத்தில் மோதி விபத்து

Update: 2024-12-26 15:33 GMT
தர்மபுரியை சேர்ந்த பச்சையப்பன் உள்ளிட்ட 9 பேர் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு ஸ்கார்பியோ காரில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் சாலையில் k.கொல்லப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பக்க டயர் வெடித்து சாலையில் கார் தாறுமாறாக சென்று சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பச்சையப்பன் உட்பட 9 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

தற்கொலை