தனிநபர் கடன் வழங்காததை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தீர்த்தமலை பகுதியில் அரசு வங்கி முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-12-28 02:16 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தீர்த்தமலையில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டிடிசிசி அரசு வங்கி முன்பு மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில் நேற்று கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தமிழக அரசின் தாட்கோ கடன், தனி நபர் கடன்களை டிடிசிசி வங்கி, மற்றும் தேசிய வங்கியான கனரா வங்கிகள் வழங்குவதில்லை எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வசதிகள் வழங்கப்பட மறுக்கப்படுவதையும், கனரா வங்கியில் 400-க்கும் மேற்பட்ட மக்களின் வங்கி கணக்கை முடக்கிய வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் வங்கிகளைக் கண்டித்தும், தமிழக முதல்வரின் தனிநபர் கடன் வழங்கும் உத்தரவை அமல்படுத்தக் கோரியும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், அ.இ.வி.தொ. சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தீர்த்தமலை மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

Similar News