ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் கோவில் சனி மகா பிரதோஷ விழா.
ஜேடர்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்திவேலூர்,டிச. 28: பரமத்தி வேலூர் தாலுக்கா ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரை ஆத்தூர் இந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதான சிவன் மற்றும் நந்திக்கு பால்,பன்னீர்,சந்தனம்,மஞ்சள்,திருமஞ்சள் மற்றும் திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.