கீரனூர் அருகே உள்ள தெற்குபட்டியை சேர்ந்தவர் கலையரசன்(29). இவர் தனது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த வெள்ளாட்டை காரில் வந்த மர்ம நபர் திருடி சென்றதாக கீரனுார் போலீ சில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதி வுகளை ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவாகியி ருந்த உருவத்தை கொண்டு விசாரணை நடத்தி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்துார் ஞானவேல் (31) என்பவரை கைது செய்து வெள்ளாடு மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.