பொதுமக்கள் சுற்றுப்புறங்களையும் சுகாதாரமாக தூய்மையாக வைத்திருக்க முன்வர வேண்டும்

ஆட்சித் தலைவர் வேண்டுகோள்;

Update: 2024-12-28 17:33 GMT
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் கூட்டுத் தூய்மை பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார் உடன் மாநகர மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் பா. தாமரைச்செல்வன் மாநகர ஆணையாளர் அனு மாமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல குழு தலைவர் பிரசன்னா குமார் மாமன்ற உறுப்பினர்கள் ஆரமுது கிரேசி அகஸ்டின் நகர் நல அலுவலர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர் பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது கடலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் பகுதிகள் உள்ள இடங்களில் தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இதே போல் கடலூர் மாவட்டத்தில் 6 நகராட்சிகளும் 14 பேரூராட்சிகளிலும் 684 பஞ்சாயத்துகளிலும் இப்பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கான முக்கிய காரணம் மழை காலத்தில் ஏற்பட்ட பெரும்பான்மையான இடங்களில் தேங்கிய குப்பைகளயெல்லாம் சுத்தப்படுத்தும் நோக்கத்தில் தூய்மையாக வைத்திருக்க கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்பணி குறைந்தபட்சம் மாதத்தில் இரண்டு தடவை அல்லது தேவைக்கு ஏற்ப இது நடத்தப்படும் அரசு சார்பு மட்டும் செய்யும் பணியாக இருந்தாலும் பொதுமக்கள் சுற்றுப்புறங்களையும் சுகாதாரமாக தூய்மையாக வைத்திருக்க முன்வர வேண்டும் அப்படி வைத்திருந்தால் கடலூர் மாவட்டம் சுத்தமாகிவிடும் இவ்வாறு அவர் தெரிவித்தார்

Similar News