கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்களுக்கான வினாடி வினா

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்தது

Update: 2024-12-28 17:32 GMT
கடலூர் மைய நூலகத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு நூலகத்தில் திருக்குறள் வினாடி வினா நடந்தது. இந் நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலக நல் நூலகர் ஆறுமுகம் வர வைத்தார் மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு லோ சக்திவேல் தலைமை தாங்கினார் வாசகர் வட்ட தலைவர் அரிமா பாஸ்கரன் கௌரவ தலைவர் தங்க சுதர்சனம்ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் புனித வளனார் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜான் போஸ்கோ பகுத்தறிவாளர் கழகம் எழில் இந்தி ஸ்ரீ வரதம் அரசு மேல்நிலைப்பள்ளி வேணுகோபாலபுரம் பட்டதாரி ஆசிரியர் கேத்தரின் பெரியார் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் தமிழ் துறை முனைவர் ஜானகி ராஜா மைய நூலகத்தின் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பின்னர் நடைபெற்ற ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முதலியார் சத்தியா முதுகலை ஆசிரியர் ஜெயந்தி பட்டதாரி ஆசிரியர் அமுதா ஆகியோர் நடுவர் குழுக்களாக மாணவர்களை தேர்ந்தெடுத்தனர் இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் போட்டியில் பங்குபெறும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஐந்தாயிரமும் இரண்டாம் பரிசு 3000 மூன்றாம் பரிசு 2000 மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது குழந்தைகள் நூலகம் நூலகர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்

Similar News