கடையாலுருட்டியில் புதிய பள்ளி கட்டடம் இன்று திறப்பு

புதிய பள்ளி கட்டடம் இன்று திறப்பு

Update: 2024-12-28 06:00 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கடையாலுருட்டி கிராமத்தில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி புதியதாக 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடத்தை திமுக கழக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல. சரவணன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News