கோவை: மூன்று மாணவிகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை !

மூன்று பள்ளி மாணவிகளுக்கு இருதயத்தில் துளை குறைபாடு (Atrial septal defect) எனும் நோய் இருந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2024-12-28 11:26 GMT
கோவை, கவுண்டம்பாளையம், திருச்சி முசிறி மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகளுக்கு இருதயத்தில் துளை குறைபாடு (Atrial septal defect) எனும் நோய் இருந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த அறுவை சிகிச்சை, Percutaneous transcatheter முறையில் மேற்கொள்ளப்பட்டதால் இரத்த இழப்பு குறைவாக இருந்தது. இந்த சிகிச்சை தேசிய சுகாதாரப் பணி மற்றும் அப்பல்லோவின் ஹீலிங் லிட்டில் ஹாட்ஸ் அமைப்பின் இணைப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது. அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் இருதய நோய் நிபுணர் முத்துக்குமரன் வழிகாட்டுதலின் படி இந்த சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், இந்த சிகிச்சை மூலம் மூன்று மாணவிகளும் நலமுடன் உள்ளனர். பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar News