மருதமலை கல்லூரியில் ஒரு நாள் ஆசிரியர் பயிற்சி பட்டறை

இண்டூர் அருகே அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரு நாள் ஆசிரியர் பயிற்சி பட்டறை

Update: 2024-12-29 01:54 GMT
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து ஒரு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பட்டறை நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். கல்வி குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார். சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.பழனி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி நிகழ்வின் நோக்கத்தை விளங்கினார். இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் யுவராஜ் சிங் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்றார் போல் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பல்வேறு வகையான தொழில்நுட்ப அறிவினை ஆசிரியர்கள் பெற வேண்டும் மேலும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள் பொது அறிவை வாசிப்பின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடத்தையும் தாண்டி ஆசிரியர்கள் பல்வேறு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.மேலும் இதில் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் வரவேற்று பேசினார். நிறைவாக மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் மு.சிங்காரவேலன் நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News