ஓசூர் அருகே ஆறு டூவீலர்களுக்கு தீ வைத்த நபர் மீது வழக்கு பதிவு.
ஓசூர் அருகே ஆறு டூவீலர்களுக்கு தீ வைத்த நபர் மீது வழக்கு பதிவு.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (28) பேடரப்பள்ளியை சேர்ந்தவர் சேகர் (40) காய்கறி வியாபாரிகளன இவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு, சேகர் சின்னஎலசகிரி பகுதியில் டூவீலரில் வந்து காய்கறிகளை விற்பனை செய்தார். அப்போது. கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தியின் டூவீலர் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்தவர்களின் டூவீலர்கள் ஆகியவற்றுக்கு சேகர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த 4 டூவீலர்கள் ஒரு ஸ்கூட்டர், ஒரு மொபட் என 6 வாகனங்கள் எரிந்து சேதம டைந்தது. இது குறித்து புகாரின் பேரில், சிப்காட் போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.