நல்லூர், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு.
நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் நாமக்கல் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்தி வேலூர், ஜன.1: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் காவல் நிலையம் மற்றும் வேலகவுண்டம் பட்டி காவல் நிலையம் ஆகிய இரண்டு காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா வருடாந்திர ஆய்வு மேற் கொண்டார். அப்பொழுது காவல் நிலைய பதிவேடு மற்றும் குற்றப்பத்திரிகை பதிவேடு மற்றும் பல ஆவணங் களை சுமார் 2 மணி நேரமாக ஆய்வு செய்து நல்லூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள 1931 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த தற்போது பயன்படாமல் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்டார் மேலும் போலீசாருக்கு அறிவுரை வழங்கி அவர் களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நல்லூர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார் அப்போது பரமத்தி வேலூர் உட்கோட்ட டிஎஸ்பி சங்கீதா, வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், நல்லூர் எஸ்.ஐ கெங்காதரன், சண்முகம் வேலகவுண்டம்பட்டி எஸ். ஐ பழனி, மற்றும் எஸ் எஸ் ஐ, காவலர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.