ஜெயங்கொண்டம் அருகே பைக் மோதி பெண் பலி

ஜெயங்கொண்டம் அரு பைக் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2025-01-01 15:49 GMT
அரியலூர், ஜன.1- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கைக்கள தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி விஜயலட்சுமி (43) இவர் அருகில் உள்ள ரைஸ் மில்லுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் போது அப்போது அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெயசீலன் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விஜயலட்சுமி பலத்த காயமடைந்தார்.உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அப்போது விஜயலட்சுமியை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் அவரது கணவர் முருகேசன் புகார் அளித்தார்.புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் ஜெயசீலன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News