உடையார்பாளையம் அருகே முன் விரோத தகராறு கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு
உடையார்பாளையம் அருகே முன்னுரிமை தகராறு கூலி தொழிலாளி மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியலூர், டிச.1- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த குமார் மகன் பாலமுருகன் (28) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் மகன் ராமச்சந்திரன் (51) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் பாலமுருகனை ராமச்சந்திரன் அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து உடையார்பாளையம் போலீசார் ராமச்சந்திரன் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்