ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இரத்ததான கழகம் கோரிக்கை
ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இரத்ததான கழகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் ஜன.1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி இல்லாமல் இரத்ததை தானமாக கொடுக்க முன்வரும் பலரும் ஒரு மணி நேர பயணமாக அரியலூர் சென்று இரத்தானம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இரத்தம் கிடைக்க தாமதம் ஏற்படுகிறது.பிரசவ தாய்மார்கள் ரத்தம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு கூட ரத்தப்போக்கு காரணமாக பிரசிவித்த தாய் இறந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கியினை கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ரத்ததானதக் கழகம் மற்றும் ஆர்வமுடன் உள்ள இளைஞர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி கொண்டு வந்தால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இரத்ததான செய்ய முன்வருவார்கள். மேலும் காலதாமதம் இன்றி இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தம் உடனடியாக கிடைப்பதனால் உயிர் பலிகள் தவிர்க்கப்படும் எனவே மாவட்ட நிர்வாகம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி அமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இரத்ததான கழகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். .