கொடைக்கானல் - பழனி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து
கொடைக்கானல் - பழனி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து
கொடைக்கானலுக்கு இன்று சுற்றுலா பயணிகள் சிலர் வேன் மூலம் வந்துள்ளனர். அவர்கள் கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு, பழனி சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சவரிக்காடு என்னும் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.