ஜெய வீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம்.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஸ்ரீ ஜெய வீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சாமி ஆலயத்தில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஆரணி சாலையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ஜெய வீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சாமி ஆலயத்தில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் நடைபெற்று வந்தது அதனைத் தொடர்ந்து எம்பெருமானை குளிர்விக்கும் விதமாக சுவாமியின் திருமேனி முழுவதும் சந்தனக்காப்பு சாற்றி சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சேத்துப்பட்டு, கண்ணனூர், நம் பேடு, தச்சம்பாடி, இந்திரவனம், தச்சூர், தேவிகாபுரம், போளூர், வந்தவாசி, ஆரணி, செஞ்சி, பெரணமல்லூர், பெரிய கொழப்பலூர், நம்பேடு, மழையூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.