கண் கூசும் ஒளியை தடுக்க கருப்பு ஸ்டிக்கர்
மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார்கள்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் இன்று( டிச.4) போக்குவரத்துக் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் விபத்து தடுப்பு நடவடிக்கையாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண் கூசும் ஒளியை தவிர்க்கும் வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் சிதம்பரம் வின்ஸ்டன் மற்றும் காவலர்கள் இருந்தனர்.