நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகமாக நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

Update: 2025-01-06 10:29 GMT
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA மற்றும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நாளை (07.01.2025) செவ்வாய்கிழமை , காலை 10.00 மணியளவில் தருமபுரி BSNL அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் இருவரும் கூட்டறிக்கை இன்று வெளியிட்டுள்ளனர்.

Similar News