பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார் பெருமிதம்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் 14,428 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை என மொத்தம் ரூ.4.88 கோடி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பெருமிதம்.

Update: 2025-01-06 10:19 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், மாண்புமிகு மேயர் .து.கலாநிதி முன்னிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 14,428 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1.24 கோடி ஊக்கத்தொகை மற்றும் ரூ.3.64 கோடி ஆதரவு தள்ளுபடி தொகை என மொத்தம் ரூ.4.88 கோடி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு அறிவித்தப்படி, மாநிலத்திலேயே முதன் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 14,428 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.00 வீதம் ரூ.1.24 கோடி ஊக்கத்தொகையினையும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஒன்றியத்தின் இலாப தொகையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.0.95 பைசா வீதம் ரூ.3.64 கோடி ஆதரவு தள்ளுபடி தொகையையும் நேரடியாக உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும், போதமலை வாழ் பழங்குடியினர் பயன்பாட்டிற்காக மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் புதியதாக உருவாக்கப்பட்டதற்கான ஆணையினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை .சு.வடிவேல் ஆவின் பொதுமேலாளர் மருத்துவர் ரா.சண்முகம், துணை பதிவாளர் (பால் வளம்) ஐ.சண்முகநதி, அட்மா குழுத்தலைவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News