மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சேலம் அரசுப்பள்ளி மாணவர்கள் .

மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைச்செல்லப்பட்டனர்

Update: 2025-01-06 10:32 GMT
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின கோ-கோ விளையாட்டுப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் வலசையூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர். இவர்களுக்கு அப்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கோ-கோ விளையாட்டில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கும், இம்மாதம் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் முதலாவது உலகக்கோப்பை கோ-கோ போட்டிக்கு விளம்பரத் தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வலசையூர் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர் கோகுல் ஆகியோருக்கு மாலை அணிவித்து பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். பதக்கம் வென்றதை பெருமைப்படுத்தும் விதமாக மேளதாளம் முழங்க கோ-கோ வீரர்கள் அனைவரும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப்பேரணியில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பெற்றோர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Similar News