திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, ரயில்வே ஜங்ஷன் ரோடு நாகல் நகர் பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு நேற்று சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, சனி பிரதோஷ பூஜை நேற்று செய்யப்பட்டது. மேலும் இப்பூஜையில் கலந்து கொண்ட அப்பகுதி மக்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.