மின்மாற்றியில் திருட்டு காவலர்கள் விசாரணை

மகேந்திரமங்கலம் கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மரில்) திருட்டு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2024-12-29 02:09 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகேந்திரமங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மின் இணைப்பை துண்டித்து விட்டு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றனர். இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்த கிராம மக்கள், அடுத்த நாள் அதாவது நேற்று காலை டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜக்கசமுத்திரம் துணைமின் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்க்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயில் திருடி சென்றது கண்டறியப்பட்டது. இது குறித்து மின்வாரிய உதவி இயக்குநர் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து டிரான்ஸ்பார்மர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News