மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மௌன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கிய ஊர்வலம், சந்தைப்பேட்டை வழியாக திருமருகல் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு, மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.விஜயராகவன் தலைமையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் தமீம் அன்சாரி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மக்கள் முன்னேற்ற பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.