தென்காசி மாவட்ட காவலர் டிஜிபிக்கு கடிதம் எழுதிய நகல் வைரல் பரபரப்பு
காவலர் டிஜிபிக்கு கடிதம் எழுதிய நகல் வைரல் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் அ.பிரபாகரன் காவல் பணியில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என காவல் துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் அவர் அனுப்பியதாக கூறப்படும் மனுவில் கையெழுத்து இல்லை. உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்படும். அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் வேறு காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தகவல் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு அவர் மாறுதல் கேட்டதாக கூறப்படும் நிலையில் அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் அது குறித்தும் பரிசீலனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் , இதில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தால் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர். காவலர் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது எனவே பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. காவலர் ஒருவர் பணியில் இருந்து கொண்டு டிஜிபிக்கு கடிதம் எழுதிய சம்பவம் தென்காசி மாவட்ட காவலர்களிடையே பெரும் அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது...