போலீஸ் டார்ச்சரால் தற்கொலை - ராமநாதபுரம் எஸ்.பியிடம் புகார்

மண்டபம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் போலீசாரால் விசாரிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பியிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-12-29 12:39 GMT

ராமநாதபுரம் எஸ்.பியிடம் கிராம மக்கள் புகார்

 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி கடந்த அக்டோபர் மாதம் பால் விற்பனை செய்ய சென்றபோது மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர் அந்த புகாரில், முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பேச்சியம்மாள் படுகொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னக்காஞ்சி என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சின்னக்காஞ்சிதான் கொலை செய்தார் என ஒப்புக்கொள்ள வேண்டும் என மண்டபம் காவல் நிலைய போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று டார்ச்சர் செய்ததாகவும் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து சின்னக்காஞ்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி சின்ன காஞ்சியின் மரணத்திற்கு மண்டபம் போலீசார் தான் காரணம் என்று கூறி முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்கொலை செய்து கொண்டவரின் உறவினர்களும் நேற்று ராமநாதபுரம் எஸ் பி அலுவலகம் சென்று மாவட்ட எஸ்பி இடம் புகார் அளித்தனர்.

Similar News