பவானி ஆற்றில் குளித்தவர் மாயம் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே உள்ள பவானி ஆற்றில் கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் - 40, என்பவர் தனது நண்பர்களான முரளிதரன், முருகன் மற்றும் சிலம்பரசன் ஆகியோரோடு காரமடை செல்வதாக கூறி அழைத்துவிட்டு, பவானிசாகர் பூங்கா அருகில் உள்ள பவானி ஆற்றில் இன்று மதியம் குளித்துக் கொண்டிருந்த பொழுது ஆழம் தெரியாமல் நடு ஆற்றுக்கு சென்றவர் தண்ணீர் அடித்து சென்று விட்டாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரியின் அடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தகவல் கூறியதன் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்தில் ஆற்றில் தேடிக் கொண்டுள்ளனர்.