நாமக்கல் இந்து சமய பேரவை சார்பில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு!
நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ள குடைவறைக் கோயிலான அரங்கநாதா், ரங்கநாயகி தாயாா் கோயிலில் 20 கா்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தங்கம் மருத்துவமனை மருத்துவா் எம்.மல்லிகா குழந்தைவேலு ( கோயில் அறங்காவலா்) குத்துவிளக்கேற்றினாா். மருத்துவா் ஏ.அழகம்மாள் நிகழ்வினை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தங்கம் மருத்துவமனை மருத்துவா் இரா.குழந்தைவேலு, ஆடிட்டா் ஜெ.வெங்கடசுப்பிரமணி, ஆன்மிக இந்து சமயப்பேரவை கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், சாந்தி நல்லுசாமி, பத்மா ஜெகதீசன், நடராஜன், சின்னம்மாள், கே.ஜவஹா், எஸ்.கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.இதில், கா்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவுகள், ஜவுளி வகைகள், வளையல்கள் வழங்கப்பட்டன. இதில், பக்தா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணா் உபதேச புத்தகம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. இந்து சமயப் பேரவை செயலாளா் சண்முகம் நன்றி கூறினாா்.