புதிய வழித்தடத்தில் குத்தாலம் பகுதியில் இருந்து சென்னைக்கு பேருந்து

Update: 2025-01-06 15:40 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் இருந்து சென்னை செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் சென்னை செல்வதற்கு புதிய பேருந்து இயக்க வேண்டும் என பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனிடம் கோரிக்கை வந்தநிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் குத்தாலம் தாலுக்கா நக்கம்பாடியில் இருந்து கோமல், தேரிழந்தூர், சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை மாதவரம் வரை செல்வதற்கான பொது வழிதடத்தில் புதிய பேருந்து சேவையை இன்று நக்கம்பாடியில் இருந்து பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ நிவேதாமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேருந்தானது நக்கம்பாடியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு விடியற்காலை 3.00 மணிக்கு சென்னை மாதவரம் சென்றடையும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள், பேருந்து பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் ஏ ஆர் ராஜா மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தினர், பொதுமக்கள் பேருந்து பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News