புதிதாக உருவாக்கப்படும் பேரூராட்சியில் எங்களை இணைக்க கூடாது போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள கொள்ளிடம் பேரூராட்சியில் திருமயிலாடி கிராமத்தில் உள்ள 14, 15 வார்டுகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 வார்டுககளை கொள்ளிடம் பேரூராட்சியாக உருவாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமயிலாடி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மயிலாதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து ஊராட்சி வார்டுகளாகவே செயல்பட கோரி மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் கொள்ளிடம் ஒன்றியம் திருமயிலாடி கிராமம் 14 மற்றும் 15 வார்டுகளை கொள்ளிடம் பேரூராட்சியாக இணைத்திருப்பதை நீக்கி ஊராட்சி வார்டுகளாகவே இருக்க ஆவண செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.. மிகவும் பின்தங்கிய விவசாய கூலி பணிகளை செய்யும் மக்கள் வசித்து வரும் திருமயிலாடி கிராமத்தில் வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் இல்லாத மிகவும் பின்தங்கிய கிராமம் என்றும், பல வீடுகள் கூறை வீடுகளாகவே உள்ளதால் அரசு பேரூராட்சிக்கு விதிக்கும் வரியை செலுத்த இயலாத அளவிற்கு பல குடும்பங்கள் உள்ளன என்றும். பின்தங்கிய தங்களது கிராமத்தை பேருராட்சியில் இருந்து விடுவித்து ஊராட்சியாகவே தொடர்ந்து செயல்படவும் அல்லது வேறு ஊராட்சியில் எங்களது கிராமத்தின் 14 மற்றும் 15 வார்டுகளை இணைக்கவும் பரிந்துறை செய்து ஊராட்சியாகவே தொடர வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த கிராமமக்கள் தொடர்ந்து பேரூராட்சியில் இணைப்பதை கைவிட்டு தங்கள் கிராமத்தை ஊராட்சியாகவே செயல்பட ஆவன செய்யகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.