ராமநாதபுரம் பாஜக மாவட்ட செயலாளர் கைது

பாஜக அரசு தொடர்பு துறை அணியின் மாவட்ட செயலாளர் பெண் போலீசார் மீது கை வைத்து தள்ளியதாக வழக்கு பதிவு செய்து கேணிக்கரை போலீசாரால் கைது. பாஜக சார்பில் மனித உரிமைகள் ஆணையத்தில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் பேட்டி

Update: 2025-01-05 01:59 GMT
மதுரையில் நடந்த பாஜக பெண்கள் அணியினர் சென்னை நோக்கி பேரணியாக செல்வதற்கு ராமநாதபுரம் பாஜக பெண்கள் அணியினர் சார்பாக ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.. போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது பாஜக அரசு தொடர்பு துறை அணியின் மாவட்ட செயலாளர் சண்முகநாதனை போலீசார் இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண் உதவி ஆய்வாளர் மீது கை வைத்து தள்ளியதாக கூறி சண்முக நாதனை கேணிக்கரை போலீசார் கைது செய்து ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்.போலீசார் பாஜக நிர்வாகி சண்முகநாதன் மீது வேண்டுமென்று ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மதுரையிலிருந்து சென்னை நோக்கி பாஜக பெண்கள் அணியினர் சார்பாக பேரணி நடக்க இருப்பதாக இருந்தது. அதற்காக ராமநாதபுரம் பாஜக பெண்கள் அணியினர் சார்பாக ஒரு வாகனத்தில் புறப்பட்ட போது கேணிக்கரை போலீசார் அவர்களை செல்லக்கூடாது என சொல்லி தடுத்து நிறுத்தினர்.. அங்கு சென்ற நாங்கள் ஏன் அவர்களை தடுக்கிறீர்கள் பேரணிக்கு தானே செல்கிறார்கள் என்று கூறியபோது போலீசாருக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எங்களை கைது செய்ய முற்பட்டபோது பாஜக பெண் நிர்வாகியை போலீசார் சேலையை பிடித்து இழுத்துள்ளனர். அதனை பாஜக அணியின் அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தட்டி கேட்டுள்ளார்.. உடனே அவரை மற்ற போலீசார் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். அவர் முன்னாள் ராணுவத்தினர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர். ராணுவத்தில் முதுகெலும்பு உடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு மற்றவர்களைப் போல நேராக நிமிர்ந்து நடக்க முடியாது. இந்நிலையில் அவரைப் பிடித்து இழுத்த போது எதிர்பாராத விதமாக பெண் போலீசார் மீது கை பட்டுள்ளது. இதனை வேண்டுமென்றே போலீசார் அவர் மீது கை வைத்து தள்ளியதாக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது விமன் அரெஸ்ட்மென்ட், அரசு பணி செய்ய விடாமல் தடுப்பது, பொது இடங்களில் வாய் கொழுப்பாக பேசுவது, கொலை மிரட்டல், செக்ஸ் டார்ச்சர், பெண்ணை இழிவு படுத்துவது என இத்தனை வழக்குகளும் அவர் மீது போடப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் மிகவும் வேதனை அடைந்து எங்களிடம் தெரிவித்த நிலையில் நாங்கள் சென்று போய் பார்த்தோம் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது உடனடியாக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்ய கூறிய நிலையில் ஆன்லைனில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து போலீசார் மீது வழக்கு பதிவு செய்து அவரை விடிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News