ராமநாதபுரம் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது

இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவில் CBSE பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி நடைபெற்றது

Update: 2025-01-06 05:43 GMT
ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவில் CBSE பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி பள்ளி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. தடகளப் போட்டியின் ஒலிம்பிக் ஜோதியை அமிர்த வித்யாலயம் பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏறக்குறைய 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளும் சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்றனர்.பள்ளி முதல்வரும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News