ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை மக்கள் மனு

இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பும்படி வேதனையுடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை மக்கள்

Update: 2025-01-07 02:53 GMT
இலங்கையில் தான் கஷ்டம் என்று தமிழகத்துக்கு வந்தால் இங்கே அதைவிட கஷ்டமாக இருக்கிறது. இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி கேட்கின்றனர். தங்களை இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பும்படி வேதனையுடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை தமிழ் அகதிகள். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் யுத்த காலத்திலும், அந்நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்ட போதும் அங்கிருந்து அகதிகளாக தஞ்சம் வந்த ஏராளமான இலங்கை தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கும் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் இலங்கை தமிழ் மக்கள்பத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தங்களை எப்படியாவது இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடுங்கள்'' என கண்ணீர் மல்க வேதனையுடன் கேட்டுக் கொண்டனர். இலங்கையில் தான் பொருளாதார நெருக்கடி அங்கு வாழ வழி இல்லை என்று தொப்புள் கொடி உறவுகள் இருக்கக்கூடிய தமிழகத்திற்கு வந்தோம். ஆனால், இங்கு அதைவிட மோசமான சூழல் நிலவுகிறது. சோறு தவிர வேற எதுவுமே கிடையாது, எந்த வசதியும் எங்களுக்கு செய்து தரப்படவில்லை, மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறோம் எனவே எங்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் தெரியாமல் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டோம் மன்னித்துக் கொள்ளுங்கள் எங்களை எப்படியாவது இலங்கைக்கு திருப்பி அனுப்புங்கள் என கண்ணீர் மல்க வேதனையுடன் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள் கூறுகையில், புதிதாக ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திசநாயக்கா எங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்து தருவார் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.

Similar News